எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று வடக்கு மற்றும் கிழக்கு இணைந்த பூரண ஹர்த்தால் அனுட்டிப்பதற்காக இன்று செவ்வாய் கிழமை அனைத்து தமிழ் பேசும் மக்களையும் தமிழ் தேசியம் சார்பில் இயங்கும் கட்சிகள் சார்பாக முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் அழைப்பு விடுத்தார்.
இதன் போது நீதி துறை சுயமாக இயங்க முடியாத நிலை இங்கு காணப்படுவதாவும் நீதியரசர் சரவணராஜாவிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் காரணமாக அவர் தனது பதவியை துறந்துள்ளமையை தொடர்பிலும் இந்த ஹர்த்தால் அனுட்டிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.