வெள்ளவத்தை பிரட்ரிக்கா வீதியில் காணப்படுகின்ற 8 மாடி கட்டிடத்தில் இருந்து நேற்று வியாழக்கிழமை காலை விழுந்த இளைஞன் களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வெள்ளவத்தை பிரட்ரிக்கா வீதியில் வசிக்கும் 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.