கண்டி தேசிய வைத்தியசாலையில் கர்ப்பிணிப் பிரிவுக்கு அருகில் உள்ள கழிவுநீர் வடிகாலில் இருந்து வடிகால் அமைப்பை சுத்தம் செய்ய சென்ற தொழிலாளி ஒருவர் வழங்கிய தகவலின் படி எட்டு மாத மனித கரு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் இரேஷா பெர்னாண்டோ இது தொடர்பில் தெரிவிக்கும் போது, கண்டி தேசிய வைத்தியசாலையின் கர்ப்பிணிப் பிரிவில் உள்ள தாயொருவர் இதனை வடிகாலில் வீசியிருக்கலாம், எனவும் மிருகத்தால் இழுத்துச் செல்லப்பட்டு இந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், அந்த தாய் தொடர்பில் இதுவரையில் தகவல் எவையும் கிடைக்கவில்லை என தெரிவித்தார்.
அத்துடன், வைத்தியசாலையின் பிரேத அறையில் மனித கரு வைக்கப்பட்டுள்ளதாகவும் சட்ட வைத்திய அதிகாரி பரிசோதிக்கும் வரையில் உறுதியான தகவல் இல்லை எனவும் பணிப்பாளர் கூறினார்.
இது தொடர்பில் கண்டி தலைமையக பொலிஸாரும் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.