எக்ஸ்-பிரஸ் பேர்ள் பேரழிவிற்கு இழப்பீடு வழங்குவதற்கான நீதிமன்ற உத்தரவை எக்ஸ்-பிரஸ் ஃபீடர்ஸ் மதிக்க மறுப்பது மிகவும் கவலையளிக்கிறது என இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் தெரிவித்துள்ளது.
மக்கள், கடற்கரைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்பட்ட சேதங்களின் அளவை மறுபரிசீலனை செய்யவும், சமூகங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புக்கான நீதியை நிலைநாட்டவும் நிறுவனத்தை இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.