வைத்தியசாலை ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக இலங்கையில் உள்ள 6 வைத்தியசாலைகளில் எக்ஸ்ரே பரிசோதனை முறைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி கிரிபத்கொட ஆதார வைத்தியசாலை, மினுவாங்கொட ஆதார வைத்தியசாலை, எஹலியகொட ஆதார வைத்தியசாலை, பொரளை ஆயுர்வேத போதனா வைத்தியசாலை மற்றும் இரண்டு வைத்தியசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு இலங்கை தேசிய வைத்தியசாலையின் விபத்து தொடர்பான பிரிவில் உள்ள எக்ஸ்ரே பரிசோதனை முறைகள் கடந்த மூன்று வாரங்களாக செயற்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.