இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் மறு அறிவித்தல் வரை இரத்து செய்து விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவையாக மாறியுள்ள நிலையில் சேவை தேவைகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பதில் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி, இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், அவசர தேவைகளுக்காக சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளின் ஒப்புதலுடன் மட்டுமே ஊழியர்கள் விடுமுறையை எடுக்க முடியும் என்று இலங்கை மின்சார சபையின் பதில் பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.