நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் இன்று நண்பகல் 12.00 மணி வரை அமுல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பெரும்பான்மையான மக்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
அதன்படி குறிப்பாக நானுஓயா நகரம் இன்று முற்றிலுமாக முடங்கியது வார்த்தக நிலையங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு பிரதான வீதி வெறிச்சோடி காணப்படுகின்றது. பேருந்துக்கள் நிறுத்தப்பட்டமையால் பேருந்து தரிப்பிடமும் வெறிச்சோடி காணப்படுகின்றன.
அத்துடன் இன்று காலை 10 மணிக்கு பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் நானுஓயா புகையிரத நிலையத்தில் பயணிகள் இன்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மாத்திரம் ஏற்றிக்கொண்டு பயணம் செய்ததை அவதானிக்க முடிந்தது.



