முல்லைத்தீவு பகுதியில் இன்று சனிக்கிழமை ஊஞ்சல் கயிறு இறுகி சிறுவன் உயிரிழந்துள்ளான்.
செம்மலை பிரதேசத்தை சேர்ந்த பிரசாத் தனேஷ் (வயது – 10) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் இன்று மாலை 4.30 மணியளவில் வீட்டில் ஊஞ்சல் ஆடி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கழுத்தில் ஊஞ்சல் கயிறு சுற்றி இறுகியுள்ளது. இதனையடுத்து குறித்த சிறுவனை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முன்னரே குறித்த சிறுவன் உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பாெலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.