கொக்குத்தொடுவாய் பாடசாலைக்கு முன்பாக வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் உழவு இயந்திரம் நேற்று செவ்வாய் கிழமை இரவு மோதி தடம்புரண்டதில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்து மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தின்போது கொழும்பை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் 42 மற்றும் 27 வயதுடைய இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த மூவரும் உழவு இயந்திரத்தில் பயணித்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உழவு இயந்திரத்தினை திருத்தப்பணிக்காக கொக்குளாயிலிருந்து கொக்குத்தொடுவாய் பகுதியிலுள்ள திருத்தகத்திற்கு சென்று மீண்டும் கொக்குளாய் பகுதி நோக்கி சென்று கொண்டிருந்த போது கொக்குத்தொடுவாய் பாடசாலைக்கு முன்பாக வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் மோதி உழவு இயந்திரம் தடம்புரண்டு குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை கொக்குளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.