மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற அசுத்தமான தேங்காய் எண்ணெய் உள்ளூர் சந்தையில் நுழைந்துள்ளது என்று வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே “சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெயைப் பெற்று உள்ளூர் சந்தையில் விற்பனை செய்வதில் இறக்குமதியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்,” என்று அமைச்சர் வசந்த சமரசிங்க கூறினார்.
“சில இறக்குமதி நிறுவனங்கள் கணிசமான வருவாய் ஈட்டிய பின்னர் 11 மாதங்களில் செயல்படுவதை நிறுத்திவிட்டன” என்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் திருத்தப்படும் என்றும், இதனால் மோசடிகளைத் தடுக்க வலுவான விதிகள் மற்றும் விதிமுறைகள் கொண்டுவரப்படும் என்றும் அவர் கூறினார்.