-பதுளை நிருபர்-
பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிட்டவலகம மில்லபெத்த பசறை பகுதியில் சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிட்டவலகம தொலும்புவத்த பகுதியை சேர்ந்த 30 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் அனுமதி பத்திரம் இன்றி உள்ளூரில் தயாரிக்கப்பட்ட வெடி மருந்து நிரப்பி சுடக்கூடிய துப்பாக்கி ஒன்றை தன் கைவசம் வைத்திருப்பதாக பசறை ஆக்கரத்தன்ன பகுதியில் முகாமிட்டுள்ள விசேட அதிரடிப் படையின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய சந்தேகத்துக்கு இடமான பகுதிக்கு சென்ற விசேட அதிரடிப் படையினர் தேடுதலை மேற்கொண்ட போது சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ஒன்றை கைப்பற்றியுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் துப்பாக்கியையும் பசறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.