பசறை டெமேரியா முதலாம் பிரிவு பகுதியில் சட்டவிரோதமான முறையில் அனுமதி பத்திரம் இன்றி உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றை தன் கைவசம் வைத்திருப்பதாக ஆக்கரத்தனை விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூரில் தயாரிக்கப்பட்ட வெடிமருந்து நிரப்பி சுடக்கூடிய துப்பாக்கி ஒன்றை கைப்பற்றியுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெமேரியா முதலாம் பிரிவைச் சேர்ந்த 30 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டு பசறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பசறை பொலிஸார் சந்தேக நபரை நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.