இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் நேற்று வெள்ளிக்கிழமை தனது உள்ளாடைக்குள் வெடிபொருட்களை மறைத்து கொண்டு சென்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி தலத்துய பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் போது சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட 165 கிராம் கறுப்பு துப்பாக்கி பவுடர், 605 கிராம் அமோனியா வெடிபொருட்கள், 2 மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்கள், 2 10 அடி சேவீஸ் கயிறுகள் மற்றும் 20 புகை துளிகள் என்பன மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.