இந்தியாவின் திருப்பதி பகுதியில் கும்பல் ஒன்று ஆடைகள் எதுவுமின்றி இடுப்பிற்கு கீழே வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுகின்றனர்.
இந்த கும்பல் தாங்கள் கொள்ளையடிக்கும் வீட்டை பற்றிய தகவல்களை முளுமையாக திரட்டிய பின்பு நள்ளிரவு நேரத்தில் திடீரென தாங்கள் திட்டமிட்ட வீட்டிற்கு சென்று கதவை தட்டி வீட்டின் உள்ளே சென்று அவர்களைத் தாக்கி நகைகள், பணத்தை கொள்ளையடிப்பதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், நள்ளிரவு நேரத்தில் சந்தேகப்படும் விதமாக யாரேனும் கதவைத் தட்டினாலோ, வித்தியாசமாக சத்தம் கேட்டாலே, குழாயில் இருந்து தண்ணீர் திறந்து கீழே சிந்துவதுபோல ஓசை கேட்டாலோ யாரும் வீட்டின் கதவை திறக்க வேண்டாம் என்றும் ஆந்திர பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
மேலும், விரைவில் இந்த புதிய வகை கொள்ளை கும்பலை கைது செய்வோம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.