உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு நிந்தவூர் ஆதார வைத்தியசாலையும், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் ஒழுங்கு செய்திருந்த விழிப்புணர்வு நடைபவனி இன்று செவ்வாய் கிழமை நடைபெற்றது.
இந்த நடைபவனியில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகள், நிந்தவூர் ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி, நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர், வைத்தியசாலை அதிகாரிகள், வைத்தியசாலை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

