இலங்கையில் ஏழு நாடுகளின் பிளாஸ்டிக் கழிவுகள் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, சீனா, பங்களாதேஷ், இந்தியா, மலேசியா உட்பட எட்டு நாடுகளின் பிளாஸ்டிக் கழிவுகள் இலங்கை கடற்கரையில் கரையொதுங்கியுள்ளன.
பவளப்பாறை சூழலியல் தொடர்பான இலங்கை – சீன கருத்தரங்கில் கலந்து கொண்ட ருகுணு பல்கலைகழகத்தின் கலாநிதி டேர்னி பிரதிப்குமார இலங்கையின் கடற்கரைகளில் 32 மில்லியன் கிலோ கிராம் பிளாஸ்டிக்குகள் சேகரிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பல நாடுகளில் இருந்து நீரில் அடித்துவரப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளும் இதில் காணப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்