உலக உணவுத் திட்டத்தின் அனுசரணையுடன் வெருகல் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உலர் உணவுப்பொதி வழங்கி வைக்கும் நிகழ்வானது நேற்று முன் தினம் செவ்வாய் கிழமை வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் தலைமையில் நடைபெற்றது.
வெருகல் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஆநெய்த்தீவு, இலங்கைத்துறை முகத்துவாரம் மற்றும் வெருகல் முகத்துவாரம் கிராமசேவகர் பிரிவுகளில் தெரிவுசெய்யப்பட்ட 735 பயனாளிகளுக்கும் தலா 20கிலோ துவரம் பருப்பு மற்றும் 5 லீற்றர் சமையல் எண்ணெய் என்பன வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
