பிரபல தெலுங்கு நடிகை ரேகா போஜ் தனது ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில், ‘உலகக்கோப்பையை இந்தியா வென்றுவிட்டால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நான் நிர்வாணமாக ஓடுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடந்து வரும் 13 ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் அகமதாபாத்தில் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்கிறது.
இந்தநிலையில் தெலுங்கு நடிகை ரேகா போஜ் மேற்படி அறிவிப்பை விடுத்துள்ளார். நடிகை ரேகா போஜ் கருத்தை பார்த்த ரசிகர்கள், சுயவிளம்பரத்திற்காக இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என விமர்சித்துள்ளனர்.
ஆனால் ரேகா போஜ் இதை மறுத்து, ‘இந்திய கிரிக்கெட் அணி மீதான அன்பால் இதனை செய்கிறேன்’ என்று பதில் அளித்துள்ளார்.