கொழும்பு இங்கிரிய பகுதியில் உறங்கி கொண்டிருந்தவர் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இங்கிரிய ஹந்தபாங்கொட கோவில் சந்தியில் வசித்து வந்த பந்துல பிரியந்த ஜயகொடி (வயது – 55) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கால்வாயின் மேலே உள்ள தடுப்பில் உறங்கிக் கொண்டிருந்த போது கால்வாய்க்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளமை அருகில் உள்ள கட்டிடப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காணொளி மூலம் தெரியவந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.