மோசமாக சேதமடைந்த மற்றும் இடிந்து விழுந்த கட்டிடங்களில் இருந்து உயிர் பிழைத்தவர்களை மீட்புப் பணியாளர்கள் மீட்டு வருகின்றனர்.
நிலநடுக்கம் தொடர்பில் ஜப்பான் பிரதமர் கிஷிடா கூறுகையில், “பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களைத் தேடுவதற்கும், மீட்பதற்கும் நாம் நேரத்தை எதிர்த்துப் போட்டியிட வேண்டும்.
“பல உயிரிழப்புகள், கட்டிட இடிபாடுகள் மற்றும் தீவிபத்துகள் உட்பட மிக விரிவான சேதம் உறுதி செய்யப்பட்டுள்ளதுஇ” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மின்சாரம் இல்லாததால் 33,000 வீடுகள் ஒரே இரவில் உறைபனியை எதிர்கொண்டுள்ளதாகவும் பல நகரங்களும் தண்ணீர் இல்லாமல் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.