நுவரெலியா லபுக்கலை தோட்டத்தில் இன்று வியாழக்கிழமை சிறுவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்ட நிலையில் மீட்கப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை அனுமதித்த போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
லபுக்கலை கீழ் பிரிவில் வசிக்கும் நடேசன் ஆக்காஷ்ராஜ் (வயது – 14) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தாயாரும் தந்தையாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் சிறுவன் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவருகின்றது.
பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
நுவரெலியா பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்