-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை மேற்கு சுழிபுரம் பகுதியில் வசித்து வந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்ட நிலையில் கயிறு அறுந்து கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஒரு பிள்ளையின் தந்தையான கெலும் சஞ்சீவ ரூபசிங்க (வயது 28 ) என்பவரே உயிரிழந்துள்ளார்.
அநுராதபுரம் மாவட்டத்தை சேர்ந்த குறித்த நபர், கடந்த ஆண்டு பொன்னாலை – சுழிபுரம் மேற்கில் திருமணம் செய்து அங்கு வசித்து வந்துள்ளார் ,இவருக்கு போதைவஸ்து பாவிக்கும் பழக்கம் இருந்துள்ளது.
ஏற்கனவே ஒருதடவை இவரை போதைவஸ்து பாவனை செய்ய வேண்டாம் என தடுத்தவேளை குழாய் மின்குமிளை (Tube Light) உட்கொண்டுள்ளார்.
இந்நிலையில் போதைப்பொருள் பாவிக்க வேண்டாம் என மீண்டும் அவருக்கு குடும்பத்தினர் கூறிய நிலையில் வீட்டுக்கு அருகேயுள்ள மரம் ஒன்றில் தூக்கிட்டுள்ளார்.
இதன்போது தூக்கிட்ட கயிறு அறுந்து கீழே இருந்த கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்