வெலிகந்தை மைத்திரிகம பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இனம் தெரியாதோரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் தாய் யானையை குட்டியானை அருகில் இருந்து காவல் காத்து வருகின்றது.
துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் அந்த பகுதியில் நிலத்தில் வீழ்ந்து உயிருக்கு போராடிவரும் யானைக்கு அருகில் வனவிலங்கு உத்தியோகத்தர் செல்ல முற்பட்டபோது குட்டி யானை அங்கு எவரையும் செல்லவிடாது காவல் காத்துவருகின்றது.