ஜா-எல ஆற்றில் மூழ்கி உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிளான கிருஷ்ணமூர்த்தி பிரதாபனுக்கு அவரது மரணத்திற்குப் பின் பொலிஸ் சார்ஜென்டாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜா-எல பொலிஸாரின் பிடியில் இருந்த போதைப்பொருள் சந்தேகநபர் ஒருவர், அருகில் இருந்த கால்வாயில் குதித்து நீந்தி தப்பிக்க முயன்ற நிலையில், அவரை பிடிக்க கால்வாயில் குதித்த போது நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்டு பின்னர் நேற்று வெள்ளிக்கிழமை அவர் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்படத்தக்கது.