தனமல்வில, ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தஹய்யாகலவில் உள்ள கரமெட்டிய குளத்துக்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்திலிருந்து உயிரிழந்த நிலையில் காட்டு யானையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
காட்டு யானைக்கு வனவிலங்கு அதிகாரிகள் பலமுறை சிகிச்சை அளித்திருந்த நிலையிலும், அது இறந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மரணத்துக்கான குறிப்பிட்ட காரணம் எதுவும் வெளியிடப்படவில்லைஎனவும் யானைக்கு பிரேத பரிசோதனை செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது .
சம்பவம் தொடர்பில் ஹம்பேகமுவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.