தலவாக்கலை – தவலந்தன்ன வீதியில் புடலுஓயா, பலுவத்த பிரதேசத்தில் நேற்று மாலை 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற பாடசாலை மாணவியின் தலையில் மரக்கிளை ஒன்று விழுந்து படுகாயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
அகரபத்தனை பம்பரகலை தோட்டத்தில் வசித்து வந்த விஜயராஜ் திவ்யராணி (வயது – 17) என்ற பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கண்டியில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து தனது தந்தையுடன் அகரபத்தனை பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்த போது இவ்வாறு விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவியின் சடலம் கொத்மலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.










