கம்பஹாவில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கம்பஹா, கந்தானைப் பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.பி.திலினி என்ற மாணவியே அவரின் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த நிலையிலேயே மாணவி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்று தெரிவித்த பொலிஸார் பிரேத பரிசோதனையின் பின்னரே அது தொடர்பில் கூற முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பில் உயிரிழந்த மாணவியின் பெற்றோரிடமும் சகோதரர்களிடமும் வாக்குமூலங்களை பெற்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.