நாரம்மல பகுதியில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் துப்பாக்கி இயங்கியதில் பாரவூர்தியின் சாரதி ஒருவர் உயிரிழந்தார்.
குறித்த பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு பயணித்த பாரவூர்தி ஒன்றை சோதனையிடுவதற்காக இரண்டு பொலிஸார் தடுத்துள்ளனர்.
எனினும், பொலிஸாரின் உத்தரவை மீறி குறித்த பாரவூர்தி பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து அந்த பாரவூர்தியை துரத்தி சென்று குறித்த பொலிஸார் இருவரும் தடுத்து சோதனையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, உப பொலிஸ் பரிசோதகரின் துப்பாக்கி இயங்கியதில் பாரவூர்தியின் சாரதி துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கானதுடன், சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
இதனையடுத்து அங்கிருந்த பிரதேச மக்கள் இச்சம்பவத்திற்கு பாரிய எதிர்ப்பு வெளியிட்டதுடன், நாரம்மல பொலிஸ் நிலைய வளாகத்திலும் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தததாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் உப பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.