இரத்தினபுரி அயகம தேயிலை கொலனி பொகஹவன்குவா பிரதேசத்தில் ஆயுதங்களை காட்டி மிரட்டி கடந்த வெள்ளிக்கிழமை வாகனமொன்று கொள்ளையடித்து செல்லப்பட்டுள்ளது.
பொகஹவன்குவா வாடகைக்கு செல்வதாக கூறி காரொன்றினை இடைமறித்து இருவர் வாகனத்தில் ஏறியுள்ளனர். இதன்போது காரில் சென்றவர்கள் சாரதிக்கு தயிர் கொடுத்துள்ளனர்.அதனை பருக சாரதி மறுத்ததால் வலுக்கட்டாயமாக குடிக்க கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்பின்னர் சாரதியை ஆயுதங்களைக் காட்டி மிரட்டி காரில் இருந்து இறக்கிவிட்டு துப்பாக்கி முனையில் வாகனத்தை கடத்திச் சென்றுள்ளதாக அயகம காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், சந்தேகநபர்கள் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சாரதியின் பணப்பையையும் எடுத்துச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.