யாழ்ப்பாணம்இ மானிப்பாய் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்றைய தினம் சனிக்கிழமை உணவருந்திய பின்னர் சோடா குடித்தவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
சங்கானை பகுதியை சேர்ந்த ரவீந்திராசா ரசித்தன் (வயது – 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் உணவருந்திய பின்னர் சோடா குடித்தவேளை மயங்கி விழுந்துள்ளார். கடையில் இருந்தவர்கள் அவரை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.