கொட்டகலை மற்றும் தலவாக்கலை நகரங்களில் நேற்று சனிக்கிழமை உணவகங்கள், சில்லறை மற்றும் மொத்த விற்பனை கடைகளை நடத்திய கடை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவகங்கள் மற்றும் கடைகளில் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் சரியான தரத்தில் இல்லாமை காரணமாகவும், உணவகங்களில் சமைக்கப்பட்ட உணவுகள் ஆரோக்கியமான முறையில் தயாரிப்பதில்லை என பொது சகாதார அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.