உகந்தை மலை முருகன் ஆலய வருடாந்த ஆடிவேல் மகோற்சவம் எதிர்வரும் 18 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 15 நாட்கள் தொடர்ந்தும் பூசைகள் இடம் பெற்று எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி தீர்த்தோற்சவம் இடம் பெற்று வியாழன் 03 ஆம் திகதியன்று வைரவர் பூசையுடன் இவ்வருடத்திற்கான உற்சவம் நிறைவு பெறும்.
அத்துடன் உகந்தை மலை முருகன் ஆலயத்திற்கு பாதயாத்திரை செல்லும் ஏற்பாடுகளும் கிழக்கில் இடம் பெற்று வருகின்றது.