பேருந்தில் வசூலிக்கப்பட்ட பணத்தை செலுத்தாத காரணத்தினால் இலங்கை போக்குவரத்து சபையின் 35 நடத்துனர்கள் ஒரு நாள் பணி இடைநிறுத்தம் செய்யப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன நேற்று புதன் கிழமை தெரிவித்தார்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.