கம்பளை பிரதேசத்தில் பேருந்தின் சாரதி ஒருவர் இன்று ஞாயிற்று கிழமை காலை கடத்தப்பட்டுள்ளார்.
வத்தேகம பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய, மாவெலயில் இருந்து கம்பளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதியே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.
ஓடும் பேருந்தை மறைத்து வேனில் வந்த சிலர் அவரை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
யாரால் என்ன காரணத்திற்காக இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் இதுவரை தெரியவராத நிலையில், கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.