அமெரிக்காவின் சிக்காகோ நகரின் தென்மேற்கு பகுதியில் பிளையின்ஃபில்ட் டவுன்ஷிப் எனும் இடத்தில் நேற்று முன் தினம் சனிக்கிழமை 6 வயது முஸ்லிம் சிறுவனைக் கத்தியால் குத்தி ஒருவர் கொலை செய்துள்ளார்.
ஜோசஃப் ஜியுபா (வயது – 71) என்ற நபரே அந்தச் சிறுவனை 26 முறை கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் குழுவுக்கும் இடையிலான போர் ஆகியவற்றைக் காரணம் காட்டி அவர் சிறுவனின் குடும்பத்தைத் தாக்கியிருப்பதாக அதிகாரிகளும் முஸ்லிம் உரிமை ஆர்வலர்களும் கூறுகின்றனர்.
இது தொடர்பில் ஜோ பைடன் தெரிவிக்கும் போது,
சிறுவனின் குடும்பத்தினர் பாலஸ்தீன வட்டாரத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் “நாம் அனைவரும் விரும்புவதைத் தேடித்தான் அவர்களும் அமெரிக்காவுக்கு வந்தனர். அது நிம்மதியாகத் தங்கவும் கற்கவும் வழிபடவும் ஓர் இடம்” இத்தகைய கொடூரமான வெறுப்புச் செயலுக்கு அமெரிக்காவில் இடமில்லை என்றார் பைடன்.