பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் நீண்ட நாள் மீன்பிடி படகொன்றில் பயணித்த 6 பேர் காலி கடற்பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி இதுவரை மதிப்பிடப்படவில்லை எனவும், கைதானவர்கள் காலி துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட உள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.