நாட்டில் இளைஞர் சங்கத்தை அரசியலுக்காக பயன்படுத்த கூடாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இளைஞர் சங்கங்த்தை அரசியல்மயமாக்குவது மற்றும் இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் இன்று விசேட உரையொன்றை ஆற்றிய போது முன்னாள் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.
முன்னாள் அதிகாரிகள் மற்றும் தற்போதைய அதிகாரிகளுடன் கலந்துரையாடி, இரு தரப்பினருக்கும் திருப்திகரமான தீர்வைக் கொண்டு வர வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார் .
“இலங்கை இளைஞர்களின் வேண்டுகோளின் பேரில் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் தான் இளைஞர் சங்கங்களைத் தொடங்கினேன்என்றும் கிராமத்தின் இளைஞர்களும் ஒன்று கூடும் இடமாக பொழுதுபோக்குகள், கலைகள் மற்றும் பிற செயற்பாடுகளுக்காக அந்த இளைஞர் சங்கங்கள் மூலம் இளைஞர்களின் திறமைகளை வளர்ப்பதே இதன் முக்கிய குறிக்கோள் என்றும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார் .
அந்த இலக்கு மிகவும் வெற்றிகரமாக உள்ளதுஎனவும் இளைஞர்கள் தற்போது சமூகத்தின் பல்வேறு துறைகளில் பங்கேற்கின்றனர்எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார் .
இந்த நாற்பது ஆண்டுகளில், இளைஞர் சங்கங்கள் இந்த நாட்டின் முக்கிய இளைஞர் இயக்கமாக மாறியுள்ளன. இளைஞர் சங்கங்களிலிருந்து முன்னேறிய சிலர் அரசியலில் நுழைந்துள்ளனர். சிலர் வணிகங்களில் உள்ளனர். இவர்கள் அனைவரும் முன்னேறுவதற்கான திட்டத்தை ஆதரிக்கின்றனர்என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்க குறிப்பிட்டுள்ளார் .
அரசியலமைப்பில் அமைச்சரால் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் ஒரு பாரிய கேள்வி எழுந்துள்ளதுஎனவும் எல்லா இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனஎனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார் .