கிளிநொச்சி கோணாவில் பகுதியில் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலத்தில் காயங்கள் காணப்படும் நிலையில், ஆயுதம் ஒன்றினால் தாக்கி குறித்த இளைஞர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன் சம்பவம் தொடர்பில், கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.