-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு போக்கறுப்பு கிராம சேவகர் பிரிவிலுள்ள நித்தியவெட்டை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய் கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.
நித்தியவெட்டை பகுதியை சேர்ந்த றாயூ (வயது – 25) என்னும் இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் நிகழ்ந்த பகுதிக்கு உடன் வருகை தந்து முள்ளியான் கிராமசேவகர் கி.சுபகுமார் சடலத்தை பார்வையிட்டுள்ளதுடன் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இளைஞனின் மரணம் தொடர்பில் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

