வவுனியா, பாவற்குளம் நீர்த் தேக்கத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை இளைஞருடன் சென்ற இளம் யுவதி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்
வவுனியா, நாகர்இலுப்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த ஜன்சிகா (வயது – 17) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா, பாவற்குளம் நீர்த்தேக்கமானது வான் பாய்ந்து வரும் நிலையில் குறித்த குளத்திற்கு இளைஞர் ஒருவருடன் இளம் யுவதி அங்கு சென்றுள்ளதுடன் குளத்தின் அருகில் நின்ற போது யுவதி நீரில் வீழ்ந்துள்ளார். சிலர் உடனடியாக விரைந்து செயற்ப்பட்டு யுவதியை மீட்டு, பாவற்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
எனினும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முன்னரே குறித்த யுவதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து குறித்த யுவதியின் சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.