கேகாலை அம்பன்பொல திம்பிரிய அம்போகம பிரதேசத்தில் மது விருந்து ஒன்றின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து இளைஞன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
அதே பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
அம்போகம பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மது விருந்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து வீட்டின் உரிமையாளரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த இளைஞன் எஹட்டுவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிசூடு தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.