அங்குருவத்தோட்டையில் இளம் தாய் மற்றும் மகளை கொலை செய்த சந்தேக நபரை இதுவரை பொலிஸாரால் விசாரிக்க முடியவில்லை.
சந்தேக நபருக்கு எதிரான அறிவியல் ஆதாரங்களை பொலிசார் சேகரித்து வருகின்றனர். நேற்று முன்தினம் சனி கிழமை காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட போது அவர் கத்திரிக்கோலால் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டார். அவர் தற்போது மருத்துவமனையில் காவலில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவரிடம் விசாரணை நடத்த முடியாவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வரக்காகொடை பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், வரக்காகொடை பொலிஸ் பிரிவின் குழுவொன்று வரக்காகொடையில் உள்ள வெறிச்சோடிய வீடொன்றில் தங்கியிருந்த சந்தேக நபரை கைது செய்ய முற்பட்டுள்ளது. எவ்வாறாயினும், பொலிஸ் குழு அங்கு சென்றபோது, சந்தேக நபர் வீட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார். அங்குருவாதொட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் உத்தியோகத்தர் குழுவுடன் அங்கு வந்த வரக்காகொட பொலிஸ் சார்ஜன்ட் வழிகாட்டுதலின் பேரில் சந்தேக நபரைத் தேடும் நடவடிக்கையை ஆரம்பித்தார். சந்தேக நபரை கைது செய்ய சென்ற போது, கையிலிருந்த கத்திரிக்கோலால் பொலிஸாரை தாக்கிவிட்டு தப்பியோட முயற்சித்துள்ளார். மேலும், சந்தேக நபர் கத்திரிக்கோலால் தன்னைத் தானே குத்தி காயப்படுத்திக் கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஜூலை 18ஆம் திகதி இந்த இரட்டைக் கொலை நடந்துள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணுடன் மதியம் முதல் மாலை வரை அவர் வீட்டில் சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததற்கான பல ஆதாரங்கள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு அருகிலுள்ள வீட்டில் வசிக்கும் பெண் 11 மாத குழந்தையை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று உணவு மற்றும் பானங்கள் கொடுத்து, பின்னர் வீட்டிற்கு அழைத்து வந்ததாக அதிகாரி கூறினார். அயல்வீட்டு பெண், 11 மாத குழந்தையுடன் பாதிக்கப்பட்டவரின் வீடு திரும்பிய போது, பாதிக்கப்பட்ட பெண் சந்தேக நபருடன் வீட்டில் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டுள்ளார்.
குறித்த சந்தேகநபருக்கு முச்சக்கர வண்டியொன்று உள்ளதாகவும், குறித்த முச்சக்கரவண்டியின் ஊடாகவே அவர் வீட்டுக்கு வந்துள்ளதாகவும் பொலிஸாருக்கு கிடைத்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாலை முச்சக்கரவண்டி பயணித்த வீதியிலுள்ள வீடுகளின் பாதுகாப்பு கமெராக்களை பரிசோதித்த போது, கமரா ஒன்றின் காட்சியில் இருந்து முச்சக்கரவண்டியின் தெளிவான படம் பதிவாகியுள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.முச்சக்கரவண்டி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், விஞ்ஞான பகுப்பாய்விற்காக அரசாங்க பகுப்பாய்வாளரிடம் அனுப்பி வைக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டியின் உடலைச் சுற்றிய துணியில் நூல்கள் உள்ளதா அல்லது உயிரிழந்தவர்களின் உயிரியல் மாதிரிகள் உள்ளதா என்பதைக் கண்டறிய அரச பகுப்பாய்வாளரினால் விஞ்ஞான ரீதியான விசாரணை மேற்கொள்ளப்படும் என அந்த அதிகாரி தெரிவித்தார். ஜூலை 18 ஆம் திகதி, பெண்ணின் கணவர் பொலிசில் புகார் அளித்தார். அன்றைய தினம் வீட்டிற்கு வந்தபோது மனைவியையும், குழந்தையையும் காணவில்லை என்று குறிப்பிட்டார், அவரது கணவர் தனது சகோதரியின் கணவரான சந்தேக நபரும் வீட்டில் இருந்ததாகவும், மாலை எத்தனை மணிக்கு வீட்டிற்கு வருவார் என்று கேட்டதாகவும் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
வீடு மற்றும் பல இடங்களில் உள்ள குளிர்சாதனப்பெட்டியின் கதவில் ரத்தக்கறைகள் இருந்ததால், காணாமல் போனதை குற்றமாக கருதி பொலிஸார் விசாரணை நடத்தினர். ஜூலை 18 மற்றும் 19 ஆகிய திகதிகளில் வீட்டிற்கு வந்த புகார்தாரரின் மைத்துனரை பொலிஸார் விசாரித்தனர். இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று அவர் கூறியுள்ளார். சந்தேகநபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட பின்னர், விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காவிட்டாலும், இந்த குற்றச் செயலுக்கும் தனக்கும் தொடர்பில்லை என வைத்தியசாலையில் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.
உயிரிழந்த பெண், குழந்தையின் சடலங்கள் ஒரே பெட்டியில் வைக்கப்பட்டு நேற்று ஞாயிற்று கிழமை அடக்கம் செய்யப்பட்டது. சடலங்கள் அடக்கம் செய்யப்பட்ட பின்னர், உறவினர்கள் திரும்பி வந்தபோது, உயிரிழந்த பெண்ணின் உறவினர்களுக்கும், கணவனின் உறவினர்களுக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு, பெரும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, மேலதிக பொலிசார் அழைக்கப்பட்டு, நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது.