இந்த ஆண்டின்முதல் ஆறு மாதங்களில் இலஞ்சம் வாங்கிய சம்பவங்கள் தொடர்பில் 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு ஜனவரி 01 முதல் ஜூன் 30 வரை 3ஆயிரத்து 022 முறைப்பாடுகள் கிடைத்ததாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் தெரிவித்துள்ளது.
இக்காலப் பகுதியில் 54 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, 34 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
சந்தேக நபர்களில் பொலிஸ் திணைக்களத்தை சேர்ந்த பத்து பேரும் , நீதி அமைச்சின் ஐந்து அதிகாரிகளும் , சுகாதார அமைச்சின் இரண்டு அதிகாரிகளும் இலங்கை போக்குவரத்து சபையை சேர்ந்த இரண்டு அதிகாரிகளும் அடங்குகின்றனர் .
இதேநேரம் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலஞ்சம் வாங்கிய சம்பவங்கள் தொடர்பில் ஆறு பொதுமக்களும் கைது செய்யப்பட்டதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு இலஞ்சம் வாங்கிய சம்பவங்கள் தொடர்பில் 60 சந்தேக நபர்களுக்கு எதிராக 50 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் ஆறு வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளதாகவும், 273 இலஞ்சம் தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாகவும் இலஞ்ச ஒழிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.