
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முன்னால் அதிபர்கள் போராட்டம்
-யாழ் நிருபர்-
இலங்கை அதிபர் சேவை சங்கத்தின் எற்பாட்டில், வடமாகாணத்தில் அண்மையில் அதிபர் சேவைகள் நியனத்தில் முறைகேடு உள்ளாத தெரிவித்து தமக்கான நியமனம் சரியாக வழக்கவேண்டும் எனவும், அதற்காக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அதற்கான நிவாரணத்தினை பெற்றுதரக்கோரி கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு முன்னால், இலங்கை அதிபர் சேவை சங்கத்தின் தலைவர் சிரச ஆரியவர்த்தன தலைமையில், வடமாகாண யாழ்ப்பாண மாவட்ட அதிபர் தரத்திற்கு உள்வாங்கப்பட்ட அதிபர்கள் கவனயீர்ப்பினை முன்னெடுத்தனர்.
இதில் இலங்கை அதிபர் சேவை சங்கத்தின் தலைவர் சிரச ஆரியவர்த்தன அவர்களினால் எட்டு அம்ச கோரிக்கைகள் அடங்கிய மகஜர் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர் ரி. கனகராஜ் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இதில் இலங்கை அதிபர் சேவை சங்கத்தின் நிறைவேற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிபர் தரத்தினர்கள் பலரும் கலந்துகொண்டதுடன், இவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்திலும் மகஜரினையும் கையளிக்கயுள்ளதாக இலங்கை அதிபர் சேவை சங்கத்தின் தலைவர் சிரச ஆரியவர்த்தன தெரிவித்தார்.


