கடந்த பெப்ரவரி மாதத்தில், வெளிநாடுகளிலுள்ள இலங்கை பணியாளர்களால் 476.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இது கடந்த 2023 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 16.88 சதவீத அதிகரிப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், குறித்த மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் மூலம் இலங்கை 345.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்த தொகை கடந்த வருடத்தின் பெப்ரவரி மாதத்துடன், ஒப்பிடுகையில், 113. 92 சதவீத அதிகரிப்பாகும் எனவும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.