தமிழ் நகைச்சுவை நடிகர் போண்டா மணி நேற்று சனிக்கிழமை இரவு காலமாகியுள்ளதாக தகவல் வெயியாகியுள்ளது.
இவர் தனது வீட்டில் நேற்றைய தினம் திடீரென கீழே விழுந்ததில் மூச்சுப் பேச்சு இல்லாமல் மயங்கியவுடன் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்துச் சென்ற நிலையில், போண்டா மணி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
போண்டா மணி மருத்துவமனையிலேயே இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், பலரும் உதவி செய்ய முன் வந்துள்ளனர்.
குணமடைந்து வீடு திரும்பி விட்டார் என எதிர்பார்க்கப்பட்டு வந்து நிலையில், திடீரென அவர் உயிரிழந்ததுள்ளார். இவரது மறைவுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.