முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் பிற சந்தேக நபர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் நிர்வாக பணிப்பாளர் சுசந்த சில்வாவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
2014 ஆம் ஆண்டு பிங்கிரியா மற்றும் பன்னல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவதாகக் கூறி 6.1 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் மற்றும் குழுவினருக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் போது, குற்றப் புலனாய்வுத் துறையின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, சந்தேக நபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியது.
முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்தில் கொண்ட நீதிமன்றம், சந்தேக நபரை தலா 500,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டது.
இச்சம்பவம் தொடர்பான வழக்கை மே 6 ஆம் திகதி மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்