இந்த ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை சார்பில் கிரிக்கெட் அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பு விஜயகாந்த வியாஸ்காந்திற்கு கிடைத்துள்ளது.
யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவன் வியாஸ்காந் (வயது – 22) என்பவரே இவ்வாறு இலங்கை சார்பில் குறித்த போட்டியில் பங்கேற்கவுள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இவர் (2020.12.04) இல் 2020 லங்கா பிரிமியர் லீக் சுற்றில் யாழ்ப்பாணம் அணிக்காக தனது முதலாவது T20 போட்டியில் விளையாடியமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 23 முதல் ஒக்டோபர் மாதம் 08 வரை நடைபெறவுள்ளது.