இலங்கை – இந்திய கப்பல் போக்குவரத்து நேற்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்று ஞாயிற்று கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போதிய பயணிகள் முன்பதிவு செய்யாததால் சொகுசு கப்பல் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. எனினும் திங்கட்கிழமை மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று சனிக்கிழமை காலை 7 மணியளவில் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை காணொலிக்காட்சி மூலம் புதுடெல்லியில் இருந்தபடி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிட தக்கது.