இலங்கையில் 96 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறக்கவுள்ளதாக IOC [ஐ.ஓ.சி] நிறுவனம் தெரிவித்துள்ளது.
IOC [ஐ.ஓ.சி] நிறுவனம் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பித்து இருபது வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், நாரஹேன்பிட்டி கொத்தலாவல IOC [ஐ.ஓ.சி] எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அந்த நிறுவனத்தின் இயக்குனர் விக்யான் குமார் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் 214 IOC [ஐ.ஓ.சி.] எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உள்ளன.